Wednesday, November 28, 2018

திருப்பாம்புரம்-சேஷபுரீஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய் செல்வர்,
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்,
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல்,விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.

விண்ணவர் போற்றும் திருப்பாம்புர நன்னகர் இறைவர் சிறந்த அணிகலன்கள் விளங்கும் அழகிய மார்பில் முப்புரி நூல் அணிந்தவர். திரிபுரங்களை எரித்த வீரச் செல்வர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்திய நீலமணிபோலும் திகழ்கின்ற கண்டத்தையுடைய தலைவர். உலகில் அழகிய புகழோடு விளங்கும் மறைகளை அருளியவர். நெற்றிக்கண்ணர் என திருஞானசம்பந்தர் இறைவனை போற்றுகிறார்.

ஊர்: திருப்பாம்புரம், திருவாரூர் மாவட்டம்

மூலவர்: சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர்

அம்பாள்: பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி(வண்டார் குழலி)

ஸ்தல விருட்சம்: வன்னி

தீர்த்தம்: ஆதிசேஷ தீர்த்தம்

வழிபட்டோர்கள் : ஆதிசேஷன் மற்றும் அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன்,சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள்.

ஸ்தல வரலாறு : 
ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

ஆலய சிறப்புகள்: 
ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் எட்டடி நீளம் கொண்ட ஒரு  நல்ல பாம்பு மூலவர் சன்னதியில் லிங்க திருமேனிமேல் தன்னுடைய சட்டையை உரித்து மாலையாக அணிவித்து சென்றுக்கிருக்கிறது. அவ்வாறு இருக்கும் காட்சியை புகைப்படமாக மூலவர் சன்னதியில் காணலாம். மேலும் அந்த பாம்பின் சட்டையை போட்டோ பிரேம்  செய்துள்ளனர்.

திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் கோயில் வழிபட்டால் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தரிசன பயன்கள்: ராகு -கேது தோஷம்,களத்திர தோஷம், ஜாகத்தில் கால சர்ப்பதோஷம், 18 வருட ராகு தசா நடந்தால், கேது 7 வருட தசா நடந்தால், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்..

எப்படி செல்வது : கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் கடந்து மாந்தை என்னும் ஊர் வந்தபின் வலது புறம் திரும்பி 4 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து 30 கிமீ. மயிலாடுதுறையில் இருந்து வருவதென்றால் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் கொல்லுமாங்குடி என்னும் ஊர் அருகே வலதுபுறம் திரும்பி மாந்தை சென்று கோயிலை அடையலாம். இது 24 கிமீ தூரம் ஆகும். சிறுகுடி என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து கிழக்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது. பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வரலாம்.

எங்கே தங்குவது: கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை.

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை








Sunday, November 25, 2018

பெண்ணாகடம் பிரளயகாலேசுவரர் கோயில்

தேவார பாடல் :
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய
                                                             வாழ்க்கை ஒழியத் தவம்
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம், அடிகள் அடி நிழல்
                                                             கீழ் ஆள் ஆம் வண்ணம்,
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள் தோறும்
                                                             மறையின் ஒலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்
                                                             தொழுமின்களே!

வெளிப்படுதற்குரிய காலம் வருந்துணையும் ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள் தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக என ஞானசம்பந்தரால் பாடப்பெற்றது. அப்பரும் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

ஊர்: பெண்ணாகடம், தேவார பெயர் - தூங்கானை  மாடம்

மூலவர்: பிரளயகாலேஸ்வரர், சுடர்க்கொழுந்துநாதர்

அம்பாள்: ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி

ஸ்தல விருட்சம்: செண்பகம்

தீர்த்தம்: கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு

வழிபட்டோர்கள் : காமதேனு, ஐராவதம்

ஸ்தல வரலாறு : 
 தேவலோக பெண்கள், காமதேனு மற்றும் இந்திரனின் ஐராவதம் என்னும் யானை ஆகியோர் வந்து வழிபட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. பெண் + ஆ (காமதேனு) + கடம் (யானை) என்பதே பெண்ணாடகம் என்று வழங்கப்படுகிறது.

ஒரு பிரளய காலத்தில் இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கின. இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது

ஆலய சிறப்புகள்: மூலவரின் விமானம் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. யானையின் கால் வடிவத்தில் கஜப்பிரஷ்ட விமானம், ஐராவத யானை எப்போதும் இறைவனை வணங்குவதாக உள்ளது. இதனால் தூங்கானை மாடம் என பெயர் பெற்றது. மேலும் மூலவரை கருவறை வெளியே உள்ப்ரகாரத்தில் மற்ற மூன்று திசையிலும் காண ஏதுவாக சாளரம் உள்ளது. வேறு எங்கும் காண முடியாத தனி சிறப்பாகும்.

சோழமன்னன் ஒருவன் இத்தலம் வரும் போது வெள்ளாற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி மன்னன் சிவனை வேண்டிய போது, அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதியில் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி கோயிலுக்குள் உள்ளது. இது தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில். ஏறுதற்குப் படிகள் உள்ளன. கட்டுமலைக் கோயிலின் கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்மனுக்கு சிலையுள்ளது.

மெய்கண்டார் மற்றும் 63 நாயன்மார்களில் ஒருவரான  கலிக்கம்பநாயனார் அவதரித்த தலம், திருநாவுக்கரசர் தமது திருமேனியில் திரிசூலக் குறியும் இடப முத்திரையும் பெற்ற தலமிது.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்.

எப்படி செல்வது : 
விருத்தாசலம் டவுனில்  இருந்து தென்மேற்கே 18 கி.மி. தொலைவில் பெண்ணாடம் இருக்கிறது. விருதாச்சலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் பேருந்தில் இந்த ஊர் செல்லலாம்.

எங்கே தங்குவது: விருத்தாசலம் 

தரிசன நேரம் :.தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்











Thursday, November 22, 2018

ராஜேந்தரப்பட்டினம்-திருக்குமாரசாமி கோயில்- பஞ்ச புலியூர் ஸ்தலம்

தேவார பாடல் :
படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை
உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச்
சடையான்-எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில்
விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே.

படைகளாக அமைந்த பூத கணங்களை உடையவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், உமையம்மையோடு உடனாய் விளங்குபவனும், வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவனும் ஆகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் தகுதி வாய்ந்த கோயிலில் எழுந்தருளிய விடை ஏற்றை உடைய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை, வினைகள் வந்து சாரா என திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கோயில்.

ஊர்:  ராஜேந்தரப்பட்டினம். தேவார பெயர் திருஎருக்கத்தம்புலியூர்.

மூலவர்: திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர், நீலகண்டேசுவரர், சுவேதார்க்கவனேசுவரர், திருக்குமரேசர்)

அம்பாள்: வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி, நீலமலர்க்கண்ணி, நீலோற்பலாம்பாள், அபீதகுஜநாயகி)

ஸ்தல விருட்சம்: வெள்ளெருக்கு

தீர்த்தம்: கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம்

வழிபட்டோர்கள் : முருகப்பெருமான், வியாக்ரபாதர்

ஸ்தல வரலாறு : கைலாயத்தில் சிவன் வேதங்களின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது பார்வதியின் கவனம் சிதறியது. அதனால் அவளை பரதவர் குலத்தில் மீனவப் பெண்ணாகப் பிறக்குமாறு இறைவன் சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். முருகனின் இச்செயலுக்காக இறைவன் அவரை மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் திருக்குமாரசாமி என்ற் பெயரிலும் இத்தலத்தில் விளங்குகிறார்.

ராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் ராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இராஜேந்த சோழ மன்னன் இவ்வாலயத்திற்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறான். ஆதலால் இத்தலத்திற்கு இராஜேந்தப் பட்டிணம் என்று இவ்வூர் மக்கள் பெயர் சூட்டியதாக வரலாறு.

ஆலய சிறப்புகள்: நைமிசாரண்ய முனிவர்கள் வெள்ளெருக்கு மரங்களாக இத்தலத்தில் உரு எடுத்தனர். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதாரத்தலம்.

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது வழக்கம்.பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். இந்த வீயாகரபாதர் வழிபட்ட பஞ்ச புலியூர்த்தலங்களில் தலங்களில் திருஎருக்கத்தம்புலியூர் தலமும் ஒன்றாகும். மற்ற 4 தலங்கள்: 1) திருப்பாதிரிப்புலியூர், 2) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), 3) திருப்பெரும்புலியூர் 4) ஓமாம்புலியூர்.

தரிசன பயன்கள்: பேசத் தெரியாதவர்கள் இங்கு வந்து பூஜை செய்து நிவாரணம் பெறலாம்.

எப்படி செல்வது :  விருத்தாசலம் - ஆண்டிமடம் - ஜெயங்கொண்டான் சாலையில் விருத்தாசலத்தில் இருந்து 12 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது

எங்கே தங்குவது: விருத்தாசலம்

தரிசன நேரம் :.தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





Monday, November 19, 2018

நெய்வணை-சொர்ணகடேஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர், நாள்தொறும்,
நெல்வெணெய் மேவிய நீரே;
நெல்வெணெய் மேவிய நீர்! உமை நாள்தொறும்
சொல் வணம் இடுவது சொல்லே.

நல்ல வெண்ணெய் விழுதாகப் பெய்து
செய்யப்பட்ட திருமஞ்சனம் நாள்தோறும் கொண்டருளுவீர்.
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளும் சிவபெருமானே! திருநெல்வெண்ணெய் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் உம்மைத் தினந்தோறும் துதித்துச்

சொல்லப்படுகின்ற சொற்களே பயன்தரும் சொற்களாகும் என திருஞானசம்பந்தரால் பாடபெற்ற திருக்கோயில்.

ஊர்: நெய்வணை (பழைய பெயர் திருநெல்வெணெய்)

மூலவர்: சொர்ணகடேஸ்வரர்,வெண்ணையப்பர்

அம்பாள்: நீலமலர்க்கண்ணம்மை

ஸ்தல விருட்சம்: புன்னை

தீர்த்தம்: பெண்ணை நதி

வழிபட்டோர்கள் : சனகாதி முனிவர்கள் நால்வரும்

ஸ்தல வரலாறு : ஒரு காலத்தில் இவ்வூர் மக்கள் இறைவனை வழிபடாது நிந்தித்து வந்தனர். இதனால் சினம்கொண்ட தேவர்கள் பெரும்மழை இவ்வூரில் பெய்ய செய்தனர். நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி உடையும் நிலைக்கு வந்தபோது மக்கள் மிகவும் வருந்தினர். தங்கள் குற்றத்தை உணர்ந்து இறைவனை காத்து அருளுமாறு மனமார வேண்டினர். இறைவனும் மக்கள் மேல் கருணை கொண்டு ஒரு சிறுவன் வேடத்தில் இங்கு வந்து வீடுவீடாக சென்று நெல் மூட்டைகளை சேகரித்து நீர் நிலைகளில் அருகே அடுக்கி மக்களை காத்தார். தேவர்களும் மனமிரங்கி இயற்க்கை சீற்றத்தை நிறுத்தினர்.

ஆலய சிறப்புகள்: பொதுவாக ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றுவதை நாம் பார்த்து இருப்போம். அனால், இந்த ஆலய சிவனுக்கு வெண்ணை சாற்றும் முறை கடைபிடிக்கபடுகிறது.

ஞானசம்பந்தர் கால்களை தூக்கி நடனம் ஆடுவது போல் நால்வர் சன்னதியில் காணலாம். அம்பாள் காட்சி அருளியபோது பரவசத்தில் ஞானசம்பர் நடனம் ஆடியபடி பதிகம் பாடியதாக கூறப்படுகிறது.

தரிசன பயன்கள்: இக்கோயிலில், திங்கட்கிழமை தோறும் வெண்ணை சாற்றப்படுகிறது. அவ்வாறு இறைவன் லிங்க திருமேனியில் சாற்றப்பட்ட வெண்ணையை வீட்டிற்கு கொண்டு போய் விளக்கு ஏற்றினால் தீய சக்திகள் வீட்டை விட்டு அகலும் என்பது நம்பிக்கை.

எப்படி செல்வது : 
உளுந்தூர்பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் எலவானாசூர் வந்து பின் அங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் எறையூர் வந்தடைந்து அங்கிருந்து பிரியும் பாதையில் வடகுரும்பூர் வழியாக 4 கி.மீ. தொலைவில் உள்ள நெய்வெணையை அடையலாம். குறுகிய சாலை, பகல் பொழுதில் செல்வது நல்லது.

எங்கே தங்குவது: விருத்தாசலம் 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





Friday, November 16, 2018

காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர் கோவில் - பஞ்ச பூத ஸ்தலம் (பூமி)

தேவார பாடல் :
கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை; கரவார்பால்
விரவாடும் பெருமானை; விடை ஏறும் வித்தகனை;
அரவு ஆட, சடை தாழ, அங்கையினில் அனல் ஏந்தி,
இரவு ஆடும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!

பெருமானை மறைத்தலும் மறத்தலும் செய்து உலகப் பொருள்களில் திளைக்கும் வலிய நெஞ்சினை உடையவர்கள் உணர்தற்கு அரியவனாய், வஞ்சனையில்லாத அடியவர் உள்ளத்தில் கலந்து கூத்து நிகழ்த்தும் பெருமானாய், காளையை இவரும் திறனுடையவனாய், பாம்புகள் படமெடுத்து ஆடவும் சடை தொங்கவும், உள்ளங்கையில் தீயினை ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் என அப்பரால் பாட பெற்ற திருக்கோயில்.

அப்பர் மொத்தம் 7 பதிகமும், ஞானசம்பந்தர் 4 பதிகமும் மற்றும் சுந்தரர் 1 பதிகமும் இயற்றியுள்ளனர்.

ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம்

மூலவர்: ஏகாம்பரேஸ்வரர்,ஏகாம்பரநாதர், திருவேகம்பர்

அம்பாள்: ஏலவார்குழலி

ஸ்தல விருட்சம்: மாமரம்

தீர்த்தம்: சிவகங்கை(குளம்), கம்பாநதி

வழிபட்டோர்கள் : பிரம்மா, விஷ்ணு, உருத்திரர், விஸ்வாமித்திரர்

ஸ்தல வரலாறு :  பார்வதி தேவி சிவனை வேண்டி தவம் செய்து சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். இறைவனின் கண்களை  பார்வதி தேவி ஒரு முறை தற்செயலாக மூடியதால் உலகில் இருள் சூழந்து ஜீவராசிகள் வாடியது. இதற்கு பிராயச்சித்தமாக  இறைவன் பார்வதி தேவியை பூலோகத்தில் பிறந்து தன்னை நோக்கி தவம் செய்யுமாறு பணித்தார். அவரும் இங்கு வந்து புனித தலமான இந்த காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கிப் பூஜித்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி அம்பிகை லிங்கத்தை தழுவி கட்டிக்கொண்டார். அவ்வாறு உமையம்மை தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார்.

சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்தார். அம்பிகையை அங்கேயே திருமணம் புரிந்து கொண்ட சிவபெருமான் அம்பிகைக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தார். இரண்டு நாழி நெல் கொடுத்து அதைக் கொண்டு 32 அறங்களைச் செய்யப் பணித்தார். அவ்வாறே அம்பிகை பார்வதியும் காமாட்சி என்ற பெயரில் காமக் கோட்டத்தில் அமர்ந்து அறங்களைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஆலய சிறப்புகள்: பஞ்ச பூத ஸ்தலங்களில் பூமியை குறிப்பதாகும். இங்கு பிருத்வி லிங்கமாக சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். மூல லிங்கம் மணலால் ஆனதால் இதற்கு அபிஷேகங்கள் செய்வது கிடையது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும். இந்த ஆலயம் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

விஸ்வாமித்திரர் காயத்ரி மந்திரத்தை இயற்றி உலகிற்கு அளித்த கோயில். சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தடியில் "உன்னைப் பிரியேன்" என்று சத்தியம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறி புறப்பட்டதால் சுந்தரர் தனது இரு கண் பார்வையும் இழந்தார். அப்படி பார்வை இழந்த கண்களில் இடக்கண் பார்வையை சுந்தரர் காஞ்சீபுரம் தலத்தில் பதிகம் பாடி பெற்றார்.108 வைணவ திவ்யதேசங்களில் காஞ்சீபரத்தில் மட்டுமே 15 திவயதேசங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றான நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி இந்த ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது.

ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், அப்பர் பல்லவ பேரரசர் மகேந்திர வர்மன் காலத்தில் வாழ்ந்தபோது இக்கோயிலின் அருகில் தன்னுடைய மடத்தை நிறுவி சிவத்தொண்டு செய்ததாக அறியப்படுகிறது.

தரிசன பயன்கள்: அற்புதமான திருக்கோயில், வேண்டிய பலன் கிடைக்கும். குறிப்பாக கணவன் மனைவி உறவு பலப்படும்.

எப்படி செல்வது : காஞ்சிபுரம் சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவில் உள்ளது. பேருந்து மற்றும் ரயில் மூலம் செல்லலாம். காரில் செல்வதென்றால் பெங்களூரு நெடுஞசாலை அல்லது வாலாஜாபாத் நெடுஞசாலை வழியாக செல்லலாம்.

எங்கே தங்குவது: காஞ்சிபுரம் 

தரிசன நேரம் :. 6 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

Tuesday, November 13, 2018

திருவட்டத்துறை- தீர்த்தபுரீசுவரர்- ஞானசம்பந்தர் முத்துசிவிகை பெற்ற கோயில்

தேவார பாடல் :
புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய 
மடையின் ஆர் மணிநீர் நெல்வாயிலார், 
நடையின் நால்விரல்கோவணம் நயந்த 
உடையினார், எமது உச்சியாரே.

வயற்பக்கங்களில் நண்டுகளை உடையதும்,
வாய்க்கால்களை அடுத்துள்ள நீர்மடையில் நீலமணி போன்று
தெளிந்த நீரை உடையதுமான நெல்வாயில் இறைவர்
ஒழுக்கத்திற்குக்காட்டாக   நால்விரல் அளவுள்ள கோவண
ஆடையை உடையவர். அவர் எம் முடிமேல் திகழும்

மாண்பினர் என ஞானசம்பந்தரால் பாட பெற்றது. இக் கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. மேலும் இத்தலம் நடுநாட்டுத்தலங்களில் முதல் தலமாகும்.

ஊர்: திருவட்டத்துறை (திருவட்டுறை எனவும் வழங்கப்படுகிறது ). விருத்தாசலம் அருகில் உள்ளது.பழைய பெயர் திருநெல்வாயில் அறதுறை.

மூலவர்: தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்

அம்பாள்: ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி

ஸ்தல விருட்சம்:ஆலமரம்

தீர்த்தம்: வடவெள்ளாறு

வழிபட்டோர்கள் : மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள்

ஸ்தல வரலாறு : 
திருஞானசம்பந்தருக்கு அரத்துறைநாதர் முத்துச் சிவிகையும், முத்துக்குடையும், முத்துச் சின்னங்களையும் வழங்கி அருளிய தலம் இதுவாகும். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து திருக்கோயில் செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருநெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் சம்பந்தர் தங்கினார். அன்றிரவு திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும் அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதே போன்று சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விபரங்களைக் கூறி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர். மறுநாள் காலை திருநெல்வாயில் அரத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு மாறன்பாடி சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக்குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார்.

ஆலய சிறப்புகள்: இறைவன் சுயம்பு மூர்த்தி, அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார.வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது என்றும், இதனால் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தரிசன பயன்கள்: 
செவ்வாயும், சனியும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதிகம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்திற்குரிய மரமாகும், ஆகவே மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.


எப்படி செல்வது : விருதாச்சலத்திலிருந்து தென்மேற்கு திசையில் சுமார் 25 கிமீ தொலைவில் கொடிகளம் என்னும் ஊர் அருகே உள்ளது.கொடிகளத்திலிருந்து உள்ளே சுமார் 1 கிமீ செல்லவேண்டும். குறுகிய சாலை ஒரு கார் மட்டுமே போகலாம். அனால் இருபுறமும் வயல்கள் நிறைந்த அழகான வழி. பகல் பொழுதில் செல்வது உகந்தது.

எங்கே தங்குவது: விருத்தாசலம் 

தரிசன நேரம் :. தினந்தோறும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்







Wednesday, November 7, 2018

பாடி - வலிதாய நாதர் கோயில்

தேவார பாடல் :
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,
ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்,
சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே.

வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா என வினை முடிபு கொள்க. சிவனடியார்கள், விளங்குகின்ற அழகிய மலர்களை அகங் கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு ஒரே இசையில் அம்மந்திரங்களைச் சொல்லி உலக மக்கள் தாமும் வெளிநின்று தொழுதேத்துமாறு ஊமத்தை மலரை முடிமிசைச் சூடிய பெருமான் பிரியாதுறையும் வலிதாயம் என்ற தலத்தைத் தம் சித்தத்தில் வைத்துள்ள அடியவர்கள் மேல் துன்பங்களோ நோய்களோ வந்தடைய மாட்டா என திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.

ஊர்: பாடி , சென்னை (லூகாஸ் டிவிஎஸ் அருகில்). பழைய பெயர் - திருவலிதாயம்

மூலவர்: வலிதாய நாதர், வல்லீஸ்வரர்

அம்பாள்: ஜகதாம்பாள், தாயம்மை

ஸ்தல விருட்சம்: பாதிரி, கொன்றை

தீர்த்தம்: பாரத்வாஜ தீர்த்தம்

வழிபட்டோர்கள் : பாரத்வாஜ மஹரிஷி, ராமர், அனுமன், சூரியன், சந்திரன்

ஸ்தல வரலாறு : 
ஒரு சமயம் பாரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி ஆனார். அவர் திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பாரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால் இத்தலம் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது.

ஆலய சிறப்புகள்: குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு.ஆலங்குடி குரு கோயிலுக்கு இணையான ஸ்தலமாக போற்றப்படுகிறது.திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

தரிசன பயன்கள்: குரு பரிகார ஸ்தலம்விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள். இதனால், நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை

எப்படி செல்வது : சென்னை அண்ணாநகரில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை-திருவள்ளூர் சாலையில் லூகாஸ் டிவிஎஸ் கம்பெனி எதிரில் உள்ள தெருவில் சென்றால் கோயிலை அடையலாம்.

எங்கே தங்குவது: சென்னை அண்ணாநகர் 

தரிசன நேரம் :
காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரை




Saturday, November 3, 2018

பாடல் பெற்ற ஸ்தலங்கள் - மாநிலம் மாவட்டவாரியான தொகுப்பு


 தமிழ் நாடு கோயில்கள்


அரியலூர் மாவட்டம் (2)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
காவிரிவடகரை
திருமழபாடி
வைத்தியநாதர் திருக்கோயில்
காவிரிவடகரை
கீழப்பழுவூர்
ஆலந்துறையார் திருக்கோயில்

ஈரோடு மாவட்டம்  (2)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
கொங்கு நாடு
கொடுமுடி
மகுடேஸ்வரர் திருக்கோயில்
கொங்கு நாடு
பவானி
சங்கமேஸ்வரர் திருக்கோயில்

கடலூர் மாவட்டம் (20)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
காவிரி வடகரை
ஓமாம்புலியூர்
பிரணவவியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
கானாட்டம்புலியூர்
பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
சிதம்பரம்
தில்லை நடராஜர் திருக்கோயில்
காவிரி வடகரை
சிவபுரி
உச்சிநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருக்கழிப்பாலை
பால்வண்ணநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருநாரையூர்
சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
மேலக்கடம்பூர்
அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருவேட்களம்
பாசுபதேஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
இராஜேந்திரபட்டினம்
சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
திருச்சோபுரம்
மங்களபுரீஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
திருத்தளூர்
சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
திருப்பாதிரிபுலியூர்
பாடலீஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
திருமாணிக்குழி
வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
திருவட்டத்துறை
தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
நடு நாடு
தீர்த்தனகிரி
சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
பெண்ணாடம்
பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
திருக்கூடலையாற்றூர்
நர்த்தனவல்லபேஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
விருத்தாச்சலம்
விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
இரும்பை
மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

கரூர் மாவட்டம் (4)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
காவிரிதென்கரை
அய்யர் மலை
ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
காவிரிதென்கரை
குளித்தலை
கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
கொங்கு நாடு
கரூர்
கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்
கொங்கு நாடு
வெஞ்சமாங்கூடலூர்
கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம்(12)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
தொண்டை நாடு 
அச்சிறுபாக்கம்
ஆட்சீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
எலுமியன்கோட்டூர்
தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
ஓணகாந்தன்தளி
ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
காஞ்சிபுரம்
ஏகாம்பரநாதர் திருக்கோயில்
தொண்டை நாடு 
காஞ்சிபுரம்
கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
காஞ்சிபுரம்
சத்யநாதர் திருக்கோயில்
தொண்டை நாடு 
காஞ்சிபுரம்
திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருக்கச்சூர்
கச்சபேஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருக்கழுகுன்றம்
வேதகிரீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருமாகறல்
திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருவடிசூலம்
ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருவேற்காடு
வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

சிவகங்கை மாவட்டம்(4)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
பாண்டிய நாடு
காளையார்கோவில்
சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்
பாண்டிய நாடு
திருப்புத்தூர்
திருத்தளிநாதர் திருக்கோயில்
பாண்டிய நாடு
திருப்புவனம்
புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
பாண்டிய நாடு
பிரான்மலை
கொடுங்குன்றநாதர் திருக்கோயில்

சென்னை மாவட்டம்(4)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
தொண்டை நாடு 
திருவலிதாயம்
திருவல்லீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருவான்மியூர்
மருந்தீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
மயிலாப்பூர்
கபாலீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
வடதிருமுல்லைவாயில்
மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம்(56)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
காவிரி தென்கரை
அய்யம்பேட்டை
சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
அழகாபுத்தூர்
படிக்காசுநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
ஆடுதுறை
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
ஆலங்குடி
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
ஆவூர்
பசுபதீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கண்டியூர்
பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கருக்குடி
சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கீழபழையாறை வடதளி
சோமேசர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கும்பகோணம்
கும்பேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கும்பகோணம்
சோமேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கும்பகோணம்
நாகேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
சக்கரப்பள்ளி
சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
சாக்கோட்டை
அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
சிவபுரம்
சிவகுருநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருக்கருகாவூர்
முல்லைவனநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருக்காட்டுப்பள்ளி
அக்னீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருக்கோழம்பியம்
கோகிலேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருச்சத்திமுற்றம்
சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருச்சேறை
சாரபரமேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருச்சோற்றுத்துறை
சோற்றுத்துறைநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருநாகேஸ்வரம்
நாகநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருநறையூர்
சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருநாகேஸ்வரம்
நாகேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருநீலக்குடி
நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருப்பந்துறை
சிவானந்தேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவலஞ்சுழி
திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவாலம் பொழில்
ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவிடைமருதூர்
மகாலிங்கம் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவேதிகுடி
வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
தென்குடித்திட்டை
வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
நல்லூர்
பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
பசுபதிகோயில்
பசுபதீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
பட்டீஸ்வரம்
தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
பரிதியப்பர்கோவில்
பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
பாபநாசம்
பாலைவனேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
மேலைத்திருப்பூந்துருத்தி
புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
இன்னம்பூர்
எழுத்தறிநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
கஞ்சனூர்
அக்னீஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
கொட்டையூர்
கைலாசநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
சேங்கனூர்
சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருக்கானூர்
செம்மேனிநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருக்கோடிக்காவல்
கோடீஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருந்துதேவன்குடி
கற்கடேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருப்பழனம்
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருப்பனந்தாள்
அருணஜடேசுவரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருப்புறம்பியம்
சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருப்பெரும்புலியூர்
வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருமங்கலக்குடி
பிராணநாதேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருமெய்ஞானம்
ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருவாய்பாடி
பாலுகந்தநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருவிசநல்லூர்
யோகநந்தீஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருவைகாவூர்
வில்வவனேசுவரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருவையாறு
ஐயாறப்பன் திருக்கோயில்
காவிரி வடகரை
தில்லைஸ்தானம்
நெய்யாடியப்பர் திருக்கோயில்
காவிரி வடகரை
பந்தநல்லூர்
பசுபதீஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
வடகுரங்காடுதுறை
தயாநிதீஸ்வரர் திருக்கோயில்

திண்டிவனம் மாவட்டம்(1)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
நடு நாடு
கிளியனூர்
அகஸ்தீஸ்வரர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்(13)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
காவிரி தென்கரை
திருப்பராய்த்துறை
பராய்த்துறைநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
உய்யக்கொண்டான்மலை
உஜ்ஜீவநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
உறையூர்
பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருச்சி
தாயுமானவர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவெறும்பூர்
எறும்பீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருநெடுங்குளம்
நெடுங்களநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
அன்பில்
சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
மாந்துறை
ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருப்பாற்றுறை
ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருவானைக்கா
ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருப்பைஞ்ஞீலி
ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருவாசி
மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
ஈங்கோய்மலை
மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்

திருநெல்வேலி மாவட்டம்(2)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
பாண்டிய நாடு
குற்றாலம்
குற்றாலநாதர் திருக்கோயில்
பாண்டிய நாடு
திருநெல்வேலி
நெல்லையப்பர் திருக்கோயில்

திருப்பூர் மாவட்டம்(2)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
கொங்கு நாடு
அவிநாசி
அவிநாசியப்பர் திருக்கோயில்
கொங்கு நாடு
திருமுருகன்பூண்டி
திருமுருகநாதர் திருக்கோயில்

திருவண்ணாமலை மாவட்டம்(4)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
தொண்டை நாடு 
குரங்கணில்முட்டம்
வாலீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
செய்யாறு
வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருப்பனங்காடு
தாளபுரீஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
திருவண்ணாமலை
அண்ணாமலையார் திருக்கோயில்

திருவள்ளூர் மாவட்டம்(6)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
தொண்டை நாடு 
கூவம்
திரிபுராந்தகர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருக்கண்டலம்
சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருப்பாசூர்
வாசீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருவாலங்காடு
வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருவொற்றியூர்
படம்பக்கநாதர் திருக்கோயில்
தொண்டை நாடு 
பூண்டி
ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

திருவாரூர்  மாவட்டம்(52)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
காவிரி தென்கரை
அம்பர் அம்பல்
பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
அரித்துவாரமங்கலம்
பாதாளேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
அவளிவணல்லூர்
சாட்சிநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
அன்னியூர்
அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
ஆண்டான்கோவில்
சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
இடும்பாவனம்
சற்குணநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
ஓகைப்பேரையூர்
ஜகதீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கச்சனம்
கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கருவேலி
சற்குணேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கரைவீரம்
கரவீரநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கற்பகநாதர்குளம்
கற்பகநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கீழ்வேளூர்
கேடிலியப்பர் திருக்கோயில்
காவிரி தென்கரை
குடவாசல்
கோணேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கோட்டூர்
கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கோயில்வெண்ணி
வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கோயில்
கண்ணாப்பூர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கோவிலூர்
மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
சித்தாய்மூர்
பொன்வைத்தநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
சிதலப்பதி
முக்தீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
செருகுடி
சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருக்கண்ணபுரம்
ராமநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருக்களர்
பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருக்காரவாசல்
கண்ணாயிரநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருக்கொட்டாரம்
ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருக்கொண்டீஸ்வரம்
பசுபதீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருக்கொள்ளம்புதூர்
வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருக்கொள்ளிக்காடு
அக்னீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருச்செங்காட்டங்குடி
உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருத்தங்கூர்
வெள்ளிமலைநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருத்தலையாலங்காடு
நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருநாட்டியத்தான்குடி
ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருநெல்லிக்கா
நெல்லிவனநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருப்பள்ளி முக்கூடல்
திருநேத்திரநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருப்பனையூர்
சவுந்தரேஸ்வர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருப்பாம்புரம்
சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருப்புகலூர்
வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருமாகாளம்
மகாகாளநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருமீயச்சூர்இளங்கோயில்
சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருமீயச்சூர்
மேகநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவண்டுதுறை
வண்டுறைநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவாரூர்
தியாகராஜர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவாரூர்
அரநெறியப்பர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவிற்குடி
வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவீழிமிழலை
வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
தூவாநாயனார்கோயில்
தூவாய்நாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
தேவூர்
தேவபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
நன்னிலம்
மதுவனேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
பாமணி
நாகநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
பூவனூர்
சதுரங்கவல்லபநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
மணக்கால்ஐயம்பேட்டை
அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
விளமல்
பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
ஸ்ரீவாஞ்சியம்
வாஞ்சிநாதர் திருக்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம்(53)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
காவிரி தென்கரை
மயிலாடுதுறை
மாயூரநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவிளநகர்
உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கீழப்பரசலூர்
வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
செம்பொனார்கோவில்
சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
புஞ்சை
நற்றுணையப்பர் திருக்கோயில்
காவிரி தென்கரை
மேலப்பெரும்பள்ளம்
வலம்புரநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
தலைச்சங்காடு
சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
ஆக்கூர்
தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருக்கடையூர்
அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருமயானம்
பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவைகல்
வைகல்நாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கோனேரிராஜபுரம்
உமாமகேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவாவடுதுறை
கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
தேரழுந்தூர்
வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
குத்தாலம்
உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருப்பயத்தங்குடி
திருப்பயற்றுநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருமருகல்
ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
சீயாத்தமங்கை
அயவந்தீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
நாகப்பட்டினம்
காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
சிக்கல்
நவநீதேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருப்புகலூர்
அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
வலிவலம்
மனத்துணைநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருக்குவளை
பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவாய்மூர்
வாய்மூர்நாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
வேதாரண்யம்
திருமறைக்காடர் திருக்கோயில்
காவிரி தென்கரை
அகஸ்தியன்-பள்ளி
அகத்தீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
கோடியக்காடு
கோடிக்குழகர் திருக்கோயில்
காவிரி வடகரை
ஆச்சாள்புரம்
சிவலோகத்தியாகர் திருக்கோயில்
காவிரி வடகரை
மகேந்திரப்பள்ளி
திருமேனியழகர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருமுல்லைவாசல்
முல்லைவனநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
அன்னப்பன்பேட்டை
சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
சாயாவனம்
சாயாவனேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
பூம்புகார்
பல்லவனேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருவெண்காடு
சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருக்காட்டுப்பள்ளி
ஆரண்யேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருக்குருகாவூர்
வெள்ளடைநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
சீர்காழி
சட்டைநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருக்கோலக்கா
சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
வைத்தீஸ்வரன்-கோயில்
வைத்தியநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
குறுமாணக்குடி
கண்ணாயிரமுடையார் திருக்கோயில்
காவிரி வடகரை
கீழையூர்
கடைமுடிநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருநின்றியூர்
மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருப்புன்கூர்
சிவலோகநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
நீடூர்
சோமநாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
பொன்னூர்
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருவேள்விக்குடி
கல்யாண-சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
மேலத்திருமணஞ்சேரி
ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருமணஞ்சேரி
உத்வாகநாதர்-சுவாமி திருக்கோயில்
காவிரி வடகரை
கொருக்கை
வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
தலைஞாயிறு
குற்றம்-பொறுத்த-நாதர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருக்குரக்கா
குந்தளேஸ்வரர் திருக்கோயில்
காவிரி வடகரை
திருவாளப்புத்தூர்
மாணிக்கவண்ணர் திருக்கோயில்
காவிரி வடகரை
இலுப்பைபட்டு
நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்

நாமக்கல் மாவட்டம்(1)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
கொங்கு நாடு
திருச்செங்கோடு
அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்

புதுக்கோட்டை மாவட்டம்(1)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
பாண்டிய நாடு
திருப்புனவாசல்
விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்

மதுரை  மாவட்டம்(4)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
பாண்டிய நாடு
செல்லூர்
திருவாப்புடையார் திருக்கோயில்
பாண்டிய நாடு
திருப்பரங்குன்றம்
சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
பாண்டிய நாடு
திருவேடகம்
ஏடகநாதர் திருக்கோயில்
பாண்டிய நாடு
மதுரை
சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

ராமநாதபுரம் மாவட்டம்(2)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
பாண்டிய நாடு
ராமேஸ்வரம்
ராமநாதர் திருக்கோயில்
பாண்டிய நாடு
திருவாடானை
ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்

விருதுநகர் மாவட்டம்(1)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
பாண்டிய நாடு
திருச்சுழி
திருமேனிநாதர் திருக்கோயில்

விழுப்புரம் மாவட்டம்(12)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
தொண்டை நாடு 
ஒழிந்தியாம்பட்டு
அரசலீசுவரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
கிளியனூர்
அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருவக்கரை
சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
அறகண்டநல்லூர்
அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
முண்டீச்சரம்
சிவலோகநாதர் திருக்கோயில்
நடு நாடு
டி இடையாறு
மருந்தீசர் திருக்கோயில்
நடு நாடு
திருக்கோவிலூர்
வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
திருநாவலூர்
பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
திருவாமத்தூர்
அபிராமேஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
திருவெண்ணெய்நல்லூர்
கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
நெய்வணை
சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
பனையபுரம்
பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில்


வேலூர் மாவட்டம்(3)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
தொண்டை நாடு 
தக்கோலம்
ஜலநாதீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருமால்பூர்
மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்
தொண்டை நாடு 
திருவல்லம்
வில்வநாதேஸ்வரர் திருக்கோயில்


புதுச்சேரி மாநிலம் (5)
நாடு 
இடம்
திருத்தலபெயர்
காவிரி தென்கரை
தருமபுரம்
யாழ்மூரிநாதர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருத்தெளிச்சேரி
பார்வதீஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருநள்ளாறு
தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
காவிரி தென்கரை
திருவேட்டக்குடி
சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
நடு நாடு
திருவண்டார்கோயில்
பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில்

பிற மாநிலம் (6)
மாவட்டம் 
நாடு 
இடம்
திருத்தலபெயர்
ஆந்திர மாநிலம்
பிற மாநிலம்
காளஹஸ்தி
காளத்தியப்பர் திருக்கோயில்
ஆந்திர மாநிலம்
பிற மாநிலம்
ஸ்ரீசைலம்
மல்லிகார்ஜுனர் திருக்கோயில்
உத்தரகண்ட்
பிற மாநிலம்
அருள்மன்ன
கவுரிகுண்ட்-(அநேகதங்காவதம்திருக்கோயில்
உத்தரகண்ட்
பிற மாநிலம்
கேதர்நாத்
கேதாரநாதர் திருக்கோயில்
கர்நாடகமாநிலம்
பிற மாநிலம்
திருக்கோகர்ணம்
மகாபலேஸ்வரர் திருக்கோயில்
கேரள மாநிலம்
பிற மாநிலம்
திருவஞ்சிக்குளம்
மகாதேவர் திருக்கோயில்

பிற நாடு (4)
மாவட்டம் 
நாடு 
இடம்
திருத்தலபெயர்
இலங்கை
பிற நாடு
திருக்கேதீஸ்வரம் 
திருக்கேதீச்வரர்
இலங்கை
பிற நாடு
திரிகோணமலை
கோணேஸ்வரர்
நேபாளம்
பிற நாடு
காட்மாண்டு
நீலாச்சல நாதர்
திபெத்
பிற நாடு
கைலாஷ்(இமயமலை)
கைலாயநாதர்