தேவார பாடல் :
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய
படம் மலி அரவு உடையீரே;
படம் மலி அரவு உடையீர்! உமைப் பணிபவர்
அடைவதும், அமருலகு அதுவே
வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்செறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர் என திருஞானசம்பந்தரால் பாட பாடல் பெற்றது.
ஊர்: சிறுகுடி,திருவாரூர் மாவட்டம்
மூலவர்: மங்களநாதர், சிறுகுடியீசர், சூட்சுமபுரீசுவரர்
அம்பாள்: மங்கள நாயகி
ஸ்தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்: மங்கள தீர்த்தம்
வழிபட்டோர்கள் : பார்வதி தேவி,கருடன், செவ்வாய்,கந்தர்வர்கள்
ஸ்தல வரலாறு : இத்தலத்தில் பார்வதி தேவி கைபிடியளவு மணலால் பிடித்து வைத்து சிவலிங்கம் உண்டாக்கி மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டார். சுவாமி அம்பாளுக்கு சூட்சுமமாய் காட்சி கொடுத்து ஏற்றுக்கொண்டார்.சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாய் மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத்த தலத்திற்கு சூட்சுமபுரி என்றும் இறைவனுக்கு சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவன் சிறுகுடியீசர் என்றும அழைக்கப்படுகிறார்.
ஆலய சிறப்புகள்: வைத்தீஸ்வரன் கோயில் போல் செவ்வாய் தோஷம் தீர்க்கும் ஸ்தலம். அழகிய வயல் சூழ்ந்த கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் எதிரே தாமரை பூத்த தடாகம் உள்ளது.
தரிசன பயன்கள்: செவ்வாய் தோஷ நிவர்த்தி
எப்படி செல்வது : கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் கடந்து மாந்தை என்னும் ஊர் வந்தபின் வலது புறம் திரும்பி 4 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து 30 கிமீ. மயிலாடுதுறையில் இருந்து வருவதென்றால் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் கொல்லுமாங்குடி என்னும் ஊர் அருகே வலதுபுறம் திரும்பி மாந்தை சென்று கோயிலை அடையலாம். இது 24 கிமீ தூரம் ஆகும். திருபாம்புரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது. பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வழியாக இத்தலத்திறகு வர சாலை வசதி உள்ளது.
எங்கே தங்குவது: கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை
தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

No comments:
Post a Comment