Wednesday, March 27, 2019

திருத்தலையாலங்காடு-நர்த்தனபுரீஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான் தன்னை,
             சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை, 
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை,
          ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை, 
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை,
       மூஉருவத்து ஓர் உரு ஆய் முதல் ஆய் நின்ற 
தண்டத்தில்-தலையாலங்காடன் தன்னை,
                 சாராதே சால நாள் போக்கினேனே!.

தொண்டர்க்குத் தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நின்றவனும், சூழும்நரகில் வீழாமல் தொண்டரைக் காப்பவனும், இப்புவிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆனவனும், ஆதிரை நாளை விரும்பிக்கொண்ட தலைவனும், நெற்றியிடத்துத் தோன்றி வளரும் தீயினனும், அயன், அரி, அரன் என்னும் மூவுருவங்களுள் ஓருருவமாய அரனாய் நின்று அம்மூவுருவங்களுக்கும் முதலாய் நின்ற இலிங்கவுருவினனும் ஆகிய தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளைவீணாள் ஆக்கினேன் என அப்பரால் பட பெட்ரா ஸ்தலம்.

ஊர்: திருத்தலையாலங்காடு, திருவாரூர் மாவட்டம்

மூலவர்: நர்த்தனபுரீஸ்வரர் ,நடனேசுவரர், ஆடவல்லநாதர்

அம்பாள்: உமாதேவி, திருமடந்தையம்மை, பாலாம்பிகை

ஸ்தல விருட்சம்: ஆலமரம்

தீர்த்தம்: சங்கு தீர்த்தம்

வழிபட்டோர்கள் : கபில முனிவர், தாருகாவன முனிவர்கள், காளி, சனி.

ஸ்தல வரலாறு :
தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் வேள்வி செய்து ஏவி விட்ட முயலகன் என்னும் கொடிய அரக்கனை அடக்கிய சிவபெருமான், அம் முயலகன் மீது நடனம் ஆடிய தலம் இது. எனவே நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. நடராஜர் சிலையில் ஐயனின் திருப்பாதங்களில் கீழ் முயலகன் இருப்பதை காணலாம். கபில முனிவர் பூஜித்து, தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியை பெற்றார். சரஸ்வதி தேவி பூஜித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்றார்.

ஆலய சிறப்புகள்: அம்பாள் சன்னதியில் சனி பகவான் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது திருநள்ளாருக்கு அடுத்து இங்குதான். வரலாற்று சிறப்புமிக்க இடம் - சங்க காலத்தில் பாண்டிய நெடுஞ்செழியன் இவ்வூரில் போர் புரிந்து வென்றதால் தலையாலங்கானத்து செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என பெயர் பெற்றார். அப்பருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்த திருத்தலம்

தரிசன பயன்கள்: சங்கு தீர்த்தத்தில் நீராடுபவர்கள் குன்மம் , முயலக நோய், சித்தபிரமை, வெண்குஷ்டம் முதலிய நோய் தீரும். சனி தோஷம் நிவர்த்தி ஸ்தலம்.

எப்படி செல்வது : 
கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து கிழக்கே 8.கி.மி. தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: திருவாரூர், கும்பகோணம் 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்



Sunday, March 24, 2019

கரையபுரம்-கரவீரேசுவரர் கோயில்

தேவார பாடல் :
அரியும், நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மாமணி போல் கண்டம்
கரியவன், திகழும் கரவீரத்து எம்
பெரியவன், கழல் பேணவே.

வரிகள் அமைந்த சிறந்த நீலமணி போலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: வடகண்டம் கரையபுரம், கரவீரம், திருவாரூர் மாவட்டம்,  பழைய பெயர் திருக்கரவீரம்.


மூலவர்: கரவீரேசுவரர்

அம்பாள்: பிரத்தியட்ச மின்னம்மை

ஸ்தல விருட்சம்: அலரி

தீர்த்தம்: அனவரத தீர்த்தம்

வழிபட்டோர்கள் : கௌதம முனிவர் 

ஸ்தல வரலாறு : கௌதமர் பூசித்த இத்தலம் திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயிலாகும்.கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது. பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது.

ஆலய சிறப்புகள்: இக்கோவிலில் கெளதம முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. அமாவாசை நாட்களில் பெண்கள் கெளதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. நீண்ட பாணத்தை உடைய லிங்க திருமேனி.

தரிசன பயன்கள்: திருமண தடை நீங்கும், குழந்தைகள் நோய் தீர்க்கும் ஸ்தலம் மற்றும் சரும நோய் குணமடையும் என்பதும் ஐதீகம்.

எப்படி செல்வது : திருவாரூரில் இருந்து மேற்கே கும்பகோணம் செல்லும் சாலையில் 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

எங்கே தங்குவது: திருவாரூர், கும்பகோணம் 

தரிசன நேரம் :.காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை


Friday, March 22, 2019

மயிலாடுதுறை-மயூரநாதசுவாமி கோயில்

தேவார பாடல் :
கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை 
உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர் 
வள்ளல் மா மயிலாடுதுறை உறை 
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.

மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலும், கங்கை வெள்ளம் தாங்கிய சடையனுமாகிய பெருமானை விரும்பிக் காதல் கொள்ளும் இயல்புடைய திரண்ட வளைகள் பெய்யப்பட்ட இப்பெண் உள்ளத்தால் உள்கி அப்பெருமான் திருப்பெயரையே உரைக்கும் தன்மையள் ஆயினள் என அப்பர் பாடியுள்ளார். அப்பர் இரு பதிகமும், ஞானசம்பந்தர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

ஊர்: மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.  மாயவரம், மாயூரம் எனவும் வழங்கப்படுகிறது.

மூலவர்: மயூரநாதர்

அம்பாள்: அபயாம்பிகை

ஸ்தல விருட்சம்: மாமரம், வன்னி

தீர்த்தம்: பிரம, ரிஷப தீர்த்தங்கள், காவிரியாறு

வழிபட்டோர்கள் : பிரம்மா, அம்பாள், கன்வ முனிவர், 

ஸ்தல வரலாறு : பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூருகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை ஆகும்.  சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்து விடுகிறார். காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் பார்வதியை சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது.

ஒருமுறை கண்ணுவ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கண்னுவ முனிவரை வணங்கி தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் காவிரியின் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும் கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் "முடவன் முழுக்கு" என்று கொண்டாடப்படுகிறது. துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது.

ஆலய சிறப்புகள்:  6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.

தரிசன பயன்கள்: காசி தரிசனத்திற்கு இணையான பயன்கள்

எப்படி செல்வது : சென்னையிலிருந்து பேருந்து மற்றும் ரயில் சேவைகள் உள்ளன. மேலும் கும்பகோணம், திருவாரூர், சிதம்பரம் ஆகிய இடங்களிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

எங்கே தங்குவது: மயிலாடுதுறை 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை





Saturday, March 16, 2019

புஞ்சை- நற்றுணையப்பர் கோயில்

தேவார பாடல் :
காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை 
     படர்தொடரி கள்ளி கவினிச் 
சூரைகள் பம்மிவிம்மு சுட கா டமர்ந்த 
     சிவன்மேய சோலை நகர்தான் 
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை 
     குதிகொள்ள வள்ளை துவள 
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் 
     நனிபள்ளி போலும் நமர்காள்

நமர்காள்! காரை, கூகை, முல்லை, களவாகை,
ஈகை, படர்ந்த தொடரி, கள்ளி ஆகிய தாவரங்கள் அழகுச் செய்யச்
சூரை செறிந்த சுடுகாட்டை விரும்பும் சிவபிரான் எழுந்தருளிய,
சோலைகள் சூழ்ந்த நகர், தேரைகள் ஆரைக்கொடிகளை
மிதித்துத்துள்ள, அதனைக் கண்ட வாளைமீன்கள் துள்ள, அதனால்
வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி
உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும்
நனிபள்ளியாகும் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். மூவரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

ஊர்: புஞ்சை, நாகப்பட்டினம் மாவட்டம். பழைய பெயர் திருநனிபள்ளி.

மூலவர்: நற்றுணையப்பர்

அம்பாள்: பர்வதபுத்திரி, மலையான் மடந்தை

ஸ்தல விருட்சம்: சண்பகம்,புன்னை

தீர்த்தம்: சொர்ண தீர்த்தம்,தல தீர்த்தம்

வழிபட்டோர்கள் : அகத்தியர்

ஸ்தல வரலாறு : சம்பந்தர், தன் தந்தையார் தோளிலிருந்து இத்தலப்பதிகத்தை அருளினார் என்பது வரலாறு. இதை அத்தலப்பதிகத்தின் கடைசி பாடலால் அறிகிறோம். பாலையாக இருந்த இவ்வூரை நெய்தல் நிலமாக மாறுமாறு பாடியருளியதாகவும், நெய்தலைப் பின்னும் கானகமும் வயலுமாக ஆக்கியருளினார் என்பர்.

ஆலய சிறப்புகள்: சிவபெருமான் அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்த தலம் மற்றும் அப்பர்,சுந்தரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சைவ அடிகளார்களால் பாடப்பட்ட தலம் என்ற பெருமையும் உண்டு.

திருஞானசம்பந்தரின் தாயாரான பகவதி அம்மையார் பிறந்த தலமாகும் இது. மூவராலும் பாடப் பெற்ற தலங்களில் ஒன்று என்ற் சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது.

தரிசன பயன்கள்: மூலவர் நற்றுணையப்பர் என்று அழைக்கப்படுகிறார். மனதில் உள்ள பயம் நீக்கி நல்வழிக்கு துணையாய் நிற்பவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். திருமண தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாண சுந்தரேசரை வணங்கினால் தோஷம் விலகும்

எப்படி செல்வது : மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் சாலையில்  15 கிமீ தொலைவில் உள்ளது. பூம்புகார்,திருவெண்காடு,பெருந்தோட்டம்,மங்கைமடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வழியாக அடையலாம்.

எங்கே தங்குவது: மயிலாடுதுறை

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை



Wednesday, March 13, 2019

குறுமாணக்குடி- கண்ணாயிரமுடையார் கோயில்

தேவார பாடல் :
தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி,
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம்
நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே.

குளிர்ந்த திங்கள், சினம் மிக்க பாம்பு, ஆகாயத்திலிருந்து தாழ்ந்துவந்த கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, பெண்ணும் ஆணுமாய கோலத்தில் விளங்கும் பெருங்கருணையாளனாகிய சிவபிரான் பிரியாமல் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் நண்ணா. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் நண்ணும் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: குறுமாணக்குடி, நாகப்பட்டினம் மாவட்டம்

மூலவர்: கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சகஸ்ர நேத்ராசுவரர்

அம்பாள்: சுகுந்த குந்தளாம்பிகை, முருகுவளர்கோதை

ஸ்தல விருட்சம்: சரக்கொன்றை

தீர்த்தம்: இந்திரதீர்த்தம்

வழிபட்டோர்கள் : இந்திரன்

ஸ்தல வரலாறு : தேவர்களின் தலைவனான இந்திரன், கெளதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டு, முனிவரின் வேடத்தில் அகலிகையுடன் உறவு கொண்டான்.நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் எங்கும் பெண் குறிகள் உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க, "ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்" என்றார் முனிவர். இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மாவிடம் சென்றான். அதற்கு பிரம்மா குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் பெண் குறிகளும் ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்தார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் "கண்ணாயிரமுடையார்" என்று பெயர் பெற்றார். வாமன அவதாரம் எடுத்த திருமாலும் இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட, அவருக்கும் அருள் செய்ததால் இத்தலத்திற்கு குறுமாணக்குடி என்ற மறு பெயரும் உண்டாயிற்று

ஆலய சிறப்புகள்: மூலவர் கண்ணாயிரநாதர் சுயம்புத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். பாணப்பகுதி சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன.

தரிசன பயன்கள்: திருமணமாகாதோர் இக்கோயிலுக்கு வந்து மாலைசாத்தி வழிபடும் வழக்கமுள்ளது

எப்படி செல்வது :  சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 5 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் சிவஸ்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவில் - மாயவரம் சாலையில் பாகசாலை என்ற ஊர் வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் உள்ளது

எங்கே தங்குவது: வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி 

தரிசன நேரம் : காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை. .




Sunday, March 10, 2019

வடகுரங்காடுதுறை-தயாநிதீசுவரர் கோயில்

தேவார பாடல் :
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே, கொகுடி,                                                           முல்லை,
வேங்கையே, ஞாழலே, விம்மு பாதிரிகளே, விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே

கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும்
புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர் என திருஞானசம்பந்தரால் பாடல்பெற்றது.

ஊர்: வடகுரங்காடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம், பழைய பெயர் திருவடகுரங்காடுதுறை.

மூலவர்: தயாநிதீஸ்வரர் (வாலி நாதர், சித்தலிங்கேஸ்வரர், குலை வணங்கி நாதர்

அம்பாள்: அழகு சடைமுடியம்மை (ஜடாமகுட நாயகி)

ஸ்தல விருட்சம்: தென்னை

தீர்த்தம்: 

வழிபட்டோர்கள் : வாலி, அனுமன்

ஸ்தல வரலாறு : இத்தலத்தில் இராமாயண வாலி இங்குவந்து தான் வலிமை பெற வேண்டினார். அதனால் இறைவன் வாலிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.வாலி வணங்கியமையால் வடகுரங்காடுதுறை என்றும், சுக்ரீவன் வழிபட்ட தலம் தென்குரங்காடுதுறை என்றும் அழைக்கப்படுகிறது. அனுமனும் இத்தலத்தில் பூசை செய்துள்ளார்.

ஆலய சிறப்புகள்: நல்ல வெய்யில் காலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருமுறை நடந்து வந்து கொண்டிருந்தாள். வெய்யிற் காலமானதால் தாகம் தாங்க முடியவில்லை. தாகமும், களைப்பும் மேலிட அவள் மயக்கமுற்றாள். இதலத்தில் கோவில் கொண்டுள்ள ஈசன் இதை அறிந்தார். தாயுமானவராக திருச்சிராப்பள்ளியில் ஒரு பக்தைக்கு அருள் செய்த இறைவன் இங்கு அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். இறைவனருளால் அப்பெண் தாகம் நீங்கி புத்துணர்வு அடைந்தாள். தென்னங்குலைகளை வளைத்து அருள் புரிந்ததால் இறைவன் குலைவணங்குநாதர் என்று பெயர் பெற்றார்.

வடக்கு கோஷ்டத்தில் காணப்படும் விஷ்னு துர்க்கை மிகவும் சக்தி உடைய தெய்வம். எட்டு கைகளுடன் காணப்படும் துர்க்கைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீலநிறமாக மாறிவிடுவது சிறப்பாகும்

தரிசன பயன்கள்: இத்தலத்தில் துர்க்கைக்கு ராகுகாலபூஜை செய்யும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிப் பெண்கள் இத்தல இறைவனை வணங்கி வந்தால் எவ்வித தொல்லையும் இன்றி சுகப்பிரசவம் நடக்கும்.

எப்படி செல்வது : கும்பகோணம் - திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.

எங்கே தங்குவது: கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர்.

தரிசன நேரம் : காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை


Thursday, March 7, 2019

செம்பொனார்கோவில்-சுவர்ணபுரீசுவரர் கோயில்

தேவார பாடல் :
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி,
வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்;
நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள்
தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே

திருச்செம்பொன்பள்ளிஎம்பெருமான் இவ்வுடம்பினுள் உள்ள உயிரைத் தவம் விரதம் முதலியவற்றால் வாட்டித் தூய்மையுடையதாக்கி மெய்யுணர்வு பெற்ற பெரியவர்களுக்கு எளியராய், உயர்ந்த உலகிலுள்ள தேவர்களும் அறியமுடியாத கள்ளத்தை உடையவராய், சிவபோதத்தினராய் இருக்கும் சிவஞானிகளுக்கு அமுதமும், சிவனடியார்களின் நெஞ்சில் தேனும்போல இனிப்பவராய் உள்ளார் என அப்பர் பாடியுள்ளார்

அப்பர் 2 பதிகங்களும், திருஞானசம்பந்தர் 1 பதிகமும் பெற்ற அற்புத ஸ்தலம்.

ஊர்: செம்பொனார்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம், பழைய பெயர் திருசெம்பொன்பள்ளி

மூலவர்: சுவர்ணபுரீசுவரர், தேவப்பிரியர், சுவர்ண லட்சுமீசர், செம்பொன் பள்ளியார்

அம்பாள்: மருவார் குழலி, புஷ்பாளகி, தாட்சாயணி, சுகந்த குந்தளாம்பிகை, சுகந்தவன நாயகி

ஸ்தல விருட்சம்: வன்னி, வில்வம்

தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

வழிபட்டோர்கள் : பிரம்ம தேவர், இந்திரன், குபேரன், வசிட்டர், அகத்தியர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்

ஸ்தல வரலாறு : தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறாரன். பின் ஒரு சமயம் தட்சன் தனது அகந்தை காரணமாக தான நடத்தும் ஒரு யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயினி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது தட்சன் ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும் நிந்தித்து விடுகிறான். தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டடும் என்று சாபம் இடுகிறார். அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும் படி வேண்டுகிறார். சிவனும் வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை தோற்றுவித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார். தாட்சாயிணியும் சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவபெருமான் தாட்சாயிணியை மன்னித்து மருவார் குழலியம்மை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய் என்று அருள்பாலிக்கிறார். இத்தலம் தாட்சாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.

ஆலய சிறப்புகள்: லட்சுமி இத்தல இறைவனை வழிபட்டு திருமாலை தன் கணவனாக அடைந்ததாள். எனவே இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்ற பெயர் வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு. வட்டவடிவமான ஆவுடையார் மேல் லிங்க உருவில் எழுந்தருளியுள்ள இத்தல மூர்த்தியான சுவர்ணபுரீஸ்வரர் திருமாலால் பூஜிக்கப்பட்டவர்.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்

எப்படி செல்வது : மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் 11 கிமீ தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில் 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.




Monday, March 4, 2019

கீழையூர்-கடைமுடிநாதர் கோயில்

தேவார பாடல் :
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர் 
விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,
ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன், வள நகர் கடைமுடியே.

வேதப் பொருளாய் விளங்குபவனும், அறவடிவினனும், அமுதம்போல இனியவனும், மூத்தவனும், இளையோனும், உலக மக்கள் பலராலும் இவ்வொருவனையன்றித் துணையில்லை என்று கருதி வழிபடும் முடிந்த பொருளாயுள்ளவனும், ஆகிய பெருமான் எவ்விடத்தான் என நீர் வினவுவீராயின் அவன் எழுந்தருளிய வளநகர் கடைமுடி என்னும் தலமாகும். சென்று வழிபடுவீராக என திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.

ஊர்: கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம், பழைய பெயர் திருக்கடைமுடி 

மூலவர்: கடைமுடிநாதர், அந்திசம்ரட்சணீசுவரர்

அம்பாள்: அபிராமவல்லி

ஸ்தல விருட்சம்:கிளுவை

தீர்த்தம்: கருணாதீர்த்தம்

வழிபட்டோர்கள் : பிரம்ம தேவர், கண்வ மகரிஷி

ஸ்தல வரலாறு : பிரம்மா இத்தலத்தின் இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு பிரம்ம தீர்த்தம் எனப் பெயரிட்டு அப்புனித நீரால் இறைவனை வழி பட்டுள்ளார். மகிழ்ந்த சிவன், அவருக்கு இங்கிருந்த கிளுவை மரத்தடியில் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். கண்வ மகரிஷியும் (சகுந்தலையின் வளர்ப்புத்தந்தை) இத்தல இறைவனை வழிபட்டு தன் புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொண்டார்.

ஆலய சிறப்புகள்: இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தி.இங்கு காவிரி ஆறு உத்தரவாகினியாக வடக்கு நோக்கிப் பின்னர் மேற்காகச் செல்வது முக்கியமான ஒன்று. மேற்கு பார்த்த சிவத்தலங்கள் தமிழகத்தில் சில இடங்களிலேயே உள்ளன. அதில் இதுவும் ஒன்று. லிங்க மூர்த்தம் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாக அமைந்துள்ளது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும்.

தரிசன பயன்கள்: அபிராமி அன்னையை அருகிலுள்ள கண்வமஹான் துறையில் நீராடி வெள்ளிக்ககிழமை தரிசனம் செய்து ஸெளபாக்கிய திரவியங்கள் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

எப்படி செல்வது : மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலப்பாதியைக் கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் இத்தலம் அமைந்துள்ளது.  மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - பொறையார் சாலையிலுள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருசெம்பொனார்கோவிலில் (காவிரி தென்கரைத் தலம்) இருந்து திருநனிபள்ளி (புஞ்சை) வழியாகவும் இத்தலத்திற்கு செல்லலாம்.

எங்கே தங்குவது: மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில் 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை





Sunday, March 3, 2019

அச்சிறுபாக்கம்-ஆட்சீசுவரர் கோயில்

தேவார பாடல் :
பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு
                                                   அழல் நிறம் புரைய,
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண்
                                         நூலொடு கொழும்பொடி அணிவர்;
மின் திரண்டன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை 
                                                   ஓர்பாகமாப் பேணி,
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
                                                   ஆட்சி கொண்டாரே.

அச்சிறுபாக்கத்தைத் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தமது, முறுக்கேறிய பொன் திரண்டாற் போன்ற சடை, அலைகள் பெருங்கடலில் தோன்றும் பவளக் கொடியையும், தீ வண்ணத்தையும் ஒத்துப் புரள, குன்றுகள் போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பகத்தில் விளங்கும் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையினையுடைய மென்மைத் தன்மை வாய்ந்த அரிவையாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓருருவில் ஈருருவாய்த் தோன்றும் அடிகளாவார் என திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.

ஊர்: அச்சரப்பாக்கம்,  காஞ்சிபுரம் மாவட்டம், பழைய பெயர் அச்சிறுபாக்கம்

மூலவர்: உமையாட்சீசர்

அம்பாள்: மெல்லியலாள்,சுந்தரநாயகி, பாலாம்பிகை, இளங்கிளியம்மை.

ஸ்தல விருட்சம்:சரக்கொன்றை

தீர்த்தம்: சங்கு தீர்த்தம், பானு தீர்த்தம், தேவ தீர்த்தம், சிம்ம தீர்த்தம்.

வழிபட்டோர்கள் : கண்ணுவ முனிவர், கௌதம முனிவர் வழிபட்ட திருத்தலம்.

ஸ்தல வரலாறு : வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.  இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். ஆனால் அவ்வாறு புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க தேவர்கள் மறந்தனர். அதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்து விட்டார். தேர் அச்சு முறிந்ததற்குக் காரணம் விநாயகர் தான் என்பதை உணர்ந்த சிவன் அவரை வேண்டினார். தந்தை சொல் கேட்ட விநாயகர் தேரின் அச்சை சரியாக்கினார். அதன் பின் சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமாதலால் இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி தற்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது

ஆலய சிறப்புகள்: இரண்டு சந்நிதிகள் இத்திருத்தலத்தில் உள்ளன. அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு விநாயகர் துதி பாடி பிறகு தான் திருப்புகழ் பாடத் தொடங்கினார் எனபதிலிருந்தே இவ்விநாயகரின் பெருமையை உணரலாம். விநாயகர் துதியில் "முப்புரம் எரி செய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த" என்று தலவரலாற்றைக் குறிப்பிடுகிறார்

தரிசன பயன்கள்: சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சுமுறி விநாயகர்" என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார். புதிய செயல்கள் தொடங்குவதற்கு முன் இவ்விநாயகரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. .

எப்படி செல்வது : சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் 96 கிமீ தொலைவில் உள்ளது. மேல்மருவத்தூரிலிருந்து 4 கிமீ தூரம்.

எங்கே தங்குவது: சென்னை, செங்கல்பட்டு 

தரிசன நேரம் :. காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரையிலும் மாலையில் 4-30 மணி முதல் 8-30 மணி வரை





Saturday, March 2, 2019

பாடல் பெற்ற ஸ்தலங்கள் - நாடுவாரியான தொகுப்பு

பாடல் பெற்ற ஸ்தலங்கள் - அறிமுகம் 

63 நாயன்மார்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆவார்கள். ஏழாம் நூற்றாண்டில்  தோன்றிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அப்போது பின்னடைவு அடைந்து தேக்க நிலையில் இருந்த சைவ சமயத்தை மீண்டும் தழைத்து வளரச்செய்தனர். சிவாலயங்கள் தோறும் சென்று அவர்கள் பாடிய பாடல்கள் அருட்கடலான சிவனை உருகச்செய்தது மட்டுமல்லாமல் மக்களையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இதனால் சைவ சமயம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வளர்ந்தது. எட்டாம்  நூற்றாண்டில் பிறந்த சுந்தரமூர்த்தி அவர்களும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் வழியில் சிவாலயங்கள் சென்று பாடல்கள் இயற்றி பக்தி நெறியை வளர்த்தார்.

இவ்வாறு இந்த மூவரின் பாடல்களை பெற்ற கோயில்களே பாடல் பெற்ற  ஸ்தலங்களாகும். சில கோயில்களில் மூவரும் பதிகம் (ஒரு பதிகம் என்பது 10 பாடல்களை கொண்டது) இயற்றியுள்ளனர், சில கோயில்களில் மூவரில் ஒருவர் அல்லது இருவரின் பதிகம் பெற்று இருக்கும் . இப்பாடல்கள் சைவ சமயத்தின் பன்னிரு திருமுறையில் முதல் ஏழு திருமுறைகளாக சைவ ஆதாரமாக விளங்குகிறது.

திருஞானசம்பந்தர் பாடியவை (காலம் 7ஆம் நூற்றாண்டு)

1ஆம் திருமுறை - 136 பதிகம் - 1469 பாடல்கள்
2ஆம் திருமுறை - 122 பதிகம் - 1331 பாடல்கள்
3ஆம் திருமுறை - 127 பதிகம் - 1369 பாடல்கள்

மொத்தம் - 385 பதிகம் - 4169 பாடல்கள். இவரின் திருப்பாடல்கள் திருக்கடைக்காப்பு எனவும் வழங்கப்பெறும்.

திருநாவுக்கரசர் பாடியவை (காலம் 7ஆம் நூற்றாண்டு)

4ஆம் திருமுறை - 113 பதிகம் - 1070 பாடல்கள்
5ஆம் திருமுறை - 100 பதிகம் - 1015 பாடல்கள்
6ஆம் திருமுறை - 99 பதிகம் - 980 பாடல்கள்

மொத்தம் - 312 பதிகம் - 3065 பாடல்கள். இவரின் திருப்பாடல்கள் தேவாரம்  எனவும் வழங்கப்பெறும்.

சுந்தரர் பாடியவை (காலம் 8ஆம் நூற்றாண்டு)

7ஆம் திருமுறை மொத்தம் - 84 பதிகம் - 1026 பாடல்கள். இவரின் திருப்பாடல்கள் திருப்பாட்டு எனவும் வழங்கப்பெறும்.

இந்த அற்புதமான பாடல்களை உலக மக்களுக்கு கிடைக்க செய்த புண்ணியம்  ராஜராஜ சோழன் மற்றும் நம்பியாண்டார் நம்பியை சேரும். இவர்களின் பெரும் முயற்சியால் சிதம்பரம் கோயிலில் பூட்டி கிடந்த பொக்கிஷம் கண்டெடுக்கப்பெற்றது. பல பாடல்கள் செல்லரித்து போயிருந்த நிலையிலிருந்து, எஞ்சிய பாடல்களை நம்பி அவர்கள் புதுப்பித்து திருமுறையாக உருவானது. பாடல் பெற்ற ஸ்தலங்கள் எங்கு உள்ளது என்பதையும் ஒவ்வொரு கோயில் பற்றிய விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 276 ஸ்தலங்கள் - தமிழ்நாட்டில் பெரும்பகுதியாக 260 கோயில்கள் உள்ளது, புதுச்சேரி - 6, ஆந்திரா - 2, இலங்கை - 2, உத்தரகாண்ட -2, கர்நாடகா -1, கேரளா -1,நேபால் - 1, திபெத் -1

தமிழ்நாட்டில் பெரும்பாலும் இக்கோயில்கள் தஞ்சாவூர் மாவட்டம் (57 கோயில்கள்), திருவாரூர் மாவட்டம்  (56 கோயில்கள்), நாகப்பட்டினம் மாவட்டம் (53 கோயில்கள்), கடலூர் மாவட்டம் (19 கோயில்கள்), திருச்சி மாவட்டம் (13 கோயில்கள்) உள்ளன.

சோழர் காலத்தில் நிலவிவந்த பிரிவுப்படி தொண்டை நாடு, நடுநாடு, காவிரி வடகரை, காவிரி தென்கரை, பாண்டி நாடு மற்றும் கொங்கு நாடு ஸ்தலங்கள் என கீழ கொடுக்கப்பட்டுள்ள ஸ்தலங்களின் வரிசை உள்ளது. கூடவே, மாவட்டம், கோயில் இருக்கும் இடமும், திருத்தலத்தின் தற்போதைய பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. சில ஸ்தலங்களில் தற்போதைய பெயரும் தேவார பாடலில் உள்ள பெயரும் வேறுபட்டு இருக்கும். 1300 ஆண்டுகளில் பெயர் மாற்றம் வருவது இயல்பே.

நீங்களும் இந்த அற்புதமான இந்த திருத்தலங்களை கண்டு தரிசித்து சிவனருள் பெறுவீர்.

தொண்டை நாடு ஸ்தலங்கள் (32) 

மாவட்டம் 
இடம்
திருத்தலபெயர்
கடலூர் 
காஞ்சிபுரம்
அச்சிறுபாக்கம்
ஆட்சீஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
சத்யநாதர் திருக்கோயில்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
திருக்கழுகுன்றம்
வேதகிரீஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரம்
திருமாகறல்
திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
திருவேற்காடு
வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
சென்னை 
சென்னை 
திருவான்மியூர்
மருந்தீஸ்வரர் திருக்கோயில்
சென்னை 
மயிலாப்பூர்
கபாலீஸ்வரர் திருக்கோயில்
சென்னை 
வடதிருமுல்லைவாயில்
மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
திருவண்ணாமலை
குரங்கணில்முட்டம்
வாலீஸ்வரர் திருக்கோயில்
திருவண்ணாமலை
செய்யாறு
வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவண்ணாமலை
திருப்பனங்காடு
தாளபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவள்ளூர்
திருவள்ளூர்
திருக்கண்டலம்
சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில்
திருவள்ளூர்
திருப்பாசூர்
வாசீஸ்வரர் திருக்கோயில்
திருவள்ளூர்
திருவாலங்காடு
வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருவள்ளூர்
திருவொற்றியூர்
படம்பக்கநாதர் திருக்கோயில்
திருவள்ளூர்
பூண்டி
ஊன்றீஸ்வரர் திருக்கோயில்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம்
வேலூர்
வேலூர்
வேலூர்
திருவல்லம்
வில்வநாதேஸ்வரர் திருக்கோயில்

நடு  நாடு ஸ்தலங்கள் (22)


மாவட்டம் 
இடம்
திருத்தலபெயர்
கடலூர்
கடலூர்
திருச்சோபுரம்
மங்களபுரீஸ்வரர் திருக்கோயில்
கடலூர்
கடலூர்
திருப்பாதிரிபுலியூர்
பாடலீஸ்வரர் திருக்கோயில்
கடலூர்
கடலூர்
கடலூர்
கடலூர்
தீர்த்தனகிரி
சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்
கடலூர்
கடலூர்
திருக்கூடலையாற்றூர்
நர்த்தனவல்லபேஸ்வரர் திருக்கோயில்
கடலூர்
திண்டிவனம்
- கிளியனூர்
அகஸ்தீஸ்வரர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
அண்ணாமலையார் திருக்கோயில்
புதுச்சேரி மாநிலம்
விழுப்புரம்
அறகண்டநல்லூர்
விழுப்புரம்
முண்டீச்சரம்
சிவலோகநாதர் திருக்கோயில்
விழுப்புரம்
டி இடையாறு
மருந்தீசர் திருக்கோயில்
விழுப்புரம்
திருக்கோவிலூர்
வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம்


காவிரி வடகரை  ஸ்தலங்கள் (63)


மாவட்டம் 
இடம்
திருத்தலபெயர்
அரியலூர்
திருமழபாடி
வைத்தியநாதர் திருக்கோயில்
அரியலூர்
கீழப்பழுவூர்
ஆலந்துறையார் திருக்கோயில்
கடலூர்
ஓமாம்புலியூர்
பிரணவவியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
கடலூர்
கானாட்டம்புலியூர்
பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்
கடலூர்
சிதம்பரம்
தில்லை நடராஜர் திருக்கோயில்
கடலூர்
சிவபுரி
உச்சிநாதர் திருக்கோயில்
கடலூர்
திருக்கழிப்பாலை
பால்வண்ணநாதர் திருக்கோயில்
கடலூர்
கடலூர்
மேலக்கடம்பூர்
அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
கடலூர்
திருவேட்களம்
பாசுபதேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
இன்னம்பூர்
எழுத்தறிநாதர் திருக்கோயில்
தஞ்சாவூர்
கஞ்சனூர்
அக்னீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
கொட்டையூர்
கைலாசநாதர் திருக்கோயில்
தஞ்சாவூர்
சேங்கனூர்
சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருக்கானூர்
செம்மேனிநாதர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருக்கோடிக்காவல்
கோடீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருந்துதேவன்குடி
கற்கடேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருப்பழனம்
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருப்பனந்தாள்
அருணஜடேசுவரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருப்புறம்பியம்
சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருப்பெரும்புலியூர்
வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருமங்கலக்குடி
பிராணநாதேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருமெய்ஞானம்
ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருவாய்பாடி
பாலுகந்தநாதர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருவிசநல்லூர்
யோகநந்தீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருவைகாவூர்
வில்வவனேசுவரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருவையாறு
ஐயாறப்பன் திருக்கோயில்
தஞ்சாவூர்
தில்லைஸ்தானம்
நெய்யாடியப்பர் திருக்கோயில்
தஞ்சாவூர்
பந்தநல்லூர்
பசுபதீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
வடகுரங்காடுதுறை
தயாநிதீஸ்வரர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
அன்பில்
சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
மாந்துறை
ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
திருப்பாற்றுறை
ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
திருவானைக்கா
ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
திருப்பைஞ்ஞீலி
ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
திருவாசி
மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
ஈங்கோய்மலை
மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
ஆச்சாள்புரம்
சிவலோகத்தியாகர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
மகேந்திரப்பள்ளி
திருமேனியழகர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருமுல்லைவாசல்
முல்லைவனநாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
அன்னப்பன்பேட்டை
சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
சாயாவனம்
சாயாவனேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
பூம்புகார்
பல்லவனேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருவெண்காடு
சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருக்காட்டுப்பள்ளி
ஆரண்யேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருக்குருகாவூர்
வெள்ளடைநாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
சீர்காழி
சட்டைநாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருக்கோலக்கா
சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
வைத்தீஸ்வரன்-கோயில்
வைத்தியநாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
குறுமாணக்குடி
கண்ணாயிரமுடையார் திருக்கோயில்
நாகப்பட்டினம்
கீழையூர்
கடைமுடிநாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருநின்றியூர்
மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருப்புன்கூர்
சிவலோகநாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
நீடூர்
சோமநாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
பொன்னூர்
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருவேள்விக்குடி
கல்யாண-சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
மேலத்திருமணஞ்சேரி
ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருமணஞ்சேரி
உத்வாகநாதர்-சுவாமி திருக்கோயில்
நாகப்பட்டினம்
கொருக்கை
வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
தலைஞாயிறு
குற்றம்-பொறுத்த-நாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருக்குரக்கா
நாகப்பட்டினம்
திருவாளப்புத்தூர்
மாணிக்கவண்ணர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
இலுப்பைபட்டு
நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்



காவிரி தென்கரை ஸ்தலங்கள் (127)


மாவட்டம் 
இடம்
திருத்தலபெயர்
கரூர்
அய்யர் மலை
ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
கரூர்
குளித்தலை
கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
அய்யம்பேட்டை
சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
தஞ்சாவூர்
ஆடுதுறை
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
ஆலங்குடி
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
ஆவூர்
பசுபதீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
கண்டியூர்
பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில்
தஞ்சாவூர்
கருக்குடி
சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
கீழபழையாறை வடதளி
சோமேசர் திருக்கோயில்
தஞ்சாவூர்
கும்பகோணம்
கும்பேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
கும்பகோணம்
சோமேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
கும்பகோணம்
நாகேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
சக்கரப்பள்ளி
சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
சாக்கோட்டை
அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
சிவபுரம்
சிவகுருநாதர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருக்கருகாவூர்
முல்லைவனநாதர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருக்காட்டுப்பள்ளி
அக்னீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருக்கோழம்பியம்
கோகிலேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருச்சத்திமுற்றம்
சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருச்சேறை
சாரபரமேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருச்சோற்றுத்துறை
சோற்றுத்துறைநாதர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருநாகேஸ்வரம்
நாகநாதர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருநறையூர்
சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருநாகேஸ்வரம்
நாகேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருநீலக்குடி
நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
தஞ்சாவூர்
திருவலஞ்சுழி
திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருவாலம் பொழில்
ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்
மகாலிங்கம் திருக்கோயில்
தஞ்சாவூர்
திருவேதிகுடி
வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
தென்குடித்திட்டை
வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
நல்லூர்
பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
பசுபதிகோயில்
பசுபதீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
பட்டீஸ்வரம்
தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
பரிதியப்பர்கோவில்
பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
பாபநாசம்
பாலைவனேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்
மேலைத்திருப்பூந்துருத்தி
புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
திருப்பராய்த்துறை
பராய்த்துறைநாதர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
உய்யக்கொண்டான் மலை
உஜ்ஜீவநாதர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
உறையூர்
பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
திருச்சி
தாயுமானவர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
திருவெறும்பூர்
எறும்பீஸ்வரர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி
திருநெடுங்குளம்
நெடுங்களநாதர் திருக்கோயில்
திருவாரூர்
அம்பர் அம்பல்
பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
அரித்துவாரமங்கலம்
பாதாளேஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
அவளிவணல்லூர்
சாட்சிநாதர் திருக்கோயில்
திருவாரூர்
அன்னியூர்
அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
ஆண்டான்கோவில்
சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
இடும்பாவனம்
சற்குணநாதர் திருக்கோயில்
திருவாரூர்
ஓகைப்பேரையூர்
ஜகதீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
கச்சனம்
கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
கருவேலி
சற்குணேஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
கரைவீரம்
கரவீரநாதர் திருக்கோயில்
திருவாரூர்
கற்பகநாதர்குளம்
கற்பகநாதர் திருக்கோயில்
திருவாரூர்
கீழ்வேளூர்
கேடிலியப்பர் திருக்கோயில்
திருவாரூர்
குடவாசல்
கோணேஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
கோட்டூர்
கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
கோயில்வெண்ணி
வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
கோயில்
கண்ணாப்பூர் திருக்கோயில்
திருவாரூர்
கோவிலூர்
மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
சித்தாய்மூர்
பொன்வைத்தநாதர் திருக்கோயில்
திருவாரூர்
திருவாரூர்
திருவாரூர்
திருக்கண்ணபுரம்
ராமநாதர் திருக்கோயில்
திருவாரூர்
திருக்களர்
பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
திருக்காரவாசல்
கண்ணாயிரநாதர் திருக்கோயில்
திருவாரூர்
திருக்கொட்டாரம்
ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
திருவாரூர்
திருக்கொள்ளம்புதூர்
வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
திருக்கொள்ளிக்காடு
அக்னீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
திருச்செங்காட்டங்குடி
உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
திருத்தங்கூர்
வெள்ளிமலைநாதர் திருக்கோயில்
திருவாரூர்
திருத்தலையாலங்காடு
நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
திருநாட்டியத்தான்குடி
ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
திருநெல்லிக்கா
நெல்லிவனநாதர் திருக்கோயில்
திருவாரூர்
திருப்பள்ளி முக்கூடல்
திருநேத்திரநாதர் திருக்கோயில்
திருவாரூர்
திருப்பனையூர்
சவுந்தரேஸ்வர் திருக்கோயில்
திருவாரூர்
திருவாரூர்
திருப்புகலூர்
வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
திருமாகாளம்
மகாகாளநாதர் திருக்கோயில்
திருவாரூர்
திருமீயச்சூர் இளங்கோயில்
சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
திருமீயச்சூர்
மேகநாதர் திருக்கோயில்
திருவாரூர்
திருவண்டுதுறை
வண்டுறைநாதர் திருக்கோயில்
திருவாரூர்
திருவாரூர்
தியாகராஜர் திருக்கோயில்
திருவாரூர்
திருவாரூர்
அரநெறியப்பர் திருக்கோயில்
திருவாரூர்
திருவிற்குடி
வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
திருவீழிமிழலை
வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
தூவாநாயனார்கோயில்
தூவாய்நாதர் திருக்கோயில்
திருவாரூர்
தேவூர்
தேவபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
திருவாரூர்
பாமணி
நாகநாதர் திருக்கோயில்
திருவாரூர்
பூவனூர்
சதுரங்கவல்லபநாதர் திருக்கோயில்
திருவாரூர்
மணக்கால்ஐயம்பேட்டை
அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர்
விளமல்
பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
மாயூரநாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்
கீழப்பரசலூர்
வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
செம்பொனார்கோவில்
சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
புஞ்சை
நற்றுணையப்பர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
மேலப்பெரும்பள்ளம்
வலம்புரநாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
தலைச்சங்காடு
சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
ஆக்கூர்
தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருக்கடையூர்
அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருமயானம்
பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருவைகல்
வைகல்நாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
கோனேரிராஜபுரம்
உமாமகேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருவாவடுதுறை
கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
தேரழுந்தூர்
வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
குத்தாலம்
உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருப்பயத்தங்குடி
திருப்பயற்றுநாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருமருகல்
ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
சீயாத்தமங்கை
அயவந்தீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்
காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
சிக்கல்
நவநீதேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருப்புகலூர்
அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
வலிவலம்
மனத்துணைநாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
திருக்குவளை
பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்
திருமறைக்காடர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
அகஸ்தியன்-பள்ளி
அகத்தீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம்
கோடியக்காடு
கோடிக்குழகர் திருக்கோயில்
புதுச்சேரி மாநிலம்
தருமபுரம்
யாழ்மூரிநாதர் திருக்கோயில்
புதுச்சேரி மாநிலம்
திருத்தெளிச்சேரி
பார்வதீஸ்வரர் திருக்கோயில்
புதுச்சேரி மாநிலம்
திருநள்ளாறு
தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
புதுச்சேரி மாநிலம்
திருவேட்டக்குடி
சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

கொங்கு நாடு ஸ்தலங்கள் (7)


மாவட்டம் 
இடம்
திருத்தலபெயர்
ஈரோடு
கொடுமுடி
மகுடேஸ்வரர் திருக்கோயில்
ஈரோடு
பவானி
சங்கமேஸ்வரர் திருக்கோயில்
கரூர்
கரூர்
கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்
கரூர்
வெஞ்சமாங்கூடலூர்
கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்
திருப்பூர்
அவிநாசி
அவிநாசியப்பர் திருக்கோயில்
திருப்பூர்
திருமுருகன்பூண்டி
திருமுருகநாதர் திருக்கோயில்
நாமக்கல் 
திருச்செங்கோடு
அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்

பாண்டிய நாடு ஸ்தலங்கள் (7)

மாவட்டம் 
இடம்
திருத்தலபெயர்
சிவகங்கை
காளையார் கோவில்
சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்
சிவகங்கை
திருப்புத்தூர்
திருத்தளிநாதர் திருக்கோயில்
சிவகங்கை
திருப்புவனம்
புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
சிவகங்கை
பிரான்மலை
கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
திருநெல்வேலி
குற்றாலம்
குற்றாலநாதர் திருக்கோயில்
திருநெல்வேலி
திருநெல்வேலி
நெல்லையப்பர் திருக்கோயில்
புதுக்கோட்டை
திருப்புனவாசல்
விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்
மதுரை
செல்லூர்
திருவாப்புடையார் திருக்கோயில்
மதுரை
திருப்பரங்குன்றம்
சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
மதுரை
திருவேடகம்
ஏடகநாதர் திருக்கோயில்
மதுரை
மதுரை
சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ராமநாதபுரம்
ராமேஸ்வரம்
ராமநாதர் திருக்கோயில்
ராமநாதபுரம்
திருவாடானை
ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்
விருதுநகர்
திருச்சுழி
திருமேனிநாதர் திருக்கோயில்

பிற மாநிலம் (6)
மாவட்டம் 
இடம்
திருத்தலபெயர்
ஆந்திர மாநிலம்
காளஹஸ்தி
காளத்தியப்பர் திருக்கோயில்
ஆந்திர மாநிலம்
ஸ்ரீசைலம்
மல்லிகார்ஜுனர் திருக்கோயில்
உத்தரகண்ட்
அருள்மன்ன
கவுரிகுண்ட்-(அநேகதங்காவதம்) திருக்கோயில்
உத்தரகண்ட்
கேதர்நாத்
கேதாரநாதர் திருக்கோயில்
கர்நாடக மாநிலம்
திருக்கோகர்ணம்
மகாபலேஸ்வரர் திருக்கோயில்
கேரள மாநிலம்
திருவஞ்சிக்குளம்
மகாதேவர் திருக்கோயில்

பிற நாடு ஸ்தலங்கள் (4)

மாவட்டம் 
இடம்
திருத்தலபெயர்
இலங்கை
திருக்கேதீஸ்வரம் 
திருக்கேதீச்வரர்
இலங்கை
- திரிகோணமலை
கோணேஸ்வரர்
நேபாளம்
காட்மாண்டு
நீலாச்சல நாதர்
திபெத்
கைலாஷ்(இமயமலை)
கைலாயநாதர்